புலம்பும் ரம்யா நம்பீசன்

புலம்பும் ரம்யா நம்பீசன்

ரம்யா நம்பீசன்

‘என்ன தான் வெற்றிப் படங்களில் நடித்தாலும், முன்னணி வரிசைக்கு நம்மால் வர முடியவில்லையே’ என, ரம்யா நம்பீசன் புலம்புகிறாராம்.

குள்ளநரிக் கூட்டம், சேதுபதி போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றதுடன், இவரதுநடிப்புக்கு பாராட்டையும் பெற்றுத் தந்திருந்தன.

ஆனாலும், முதல் வரிசை ஹீரோயினாக இவரால் உருவெடுக்க முடியாமல், நிரந்தரமான இடத்தை பிடிப்பதற்காக தொடர்ந்து போராடுகிறார்.

‘குடும்ப பாங்கான தோற்றம், சொந்த குரலில் பாடும் திறமை ஆகியவை இருந்தும், ரம்யாவுக்கென தமிழில் ஒரு தனி இடம் இல்லாதது, வருத்தமான விடயம் தான்’ என்கின்றனர், இவரது ரசிகர்கள்.

‘சிபிராஜுடன் நடித்துள்ள சத்யா என்ற படம் நிச்சயம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும்’ என, நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார் ரம்யா.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]