முகப்பு News Local News புலமைப் பரீட்சை எழுதவிருந்த மாணவர்களுக்கு நேற்று நடந்த விபரீதம்

புலமைப் பரீட்சை எழுதவிருந்த மாணவர்களுக்கு நேற்று நடந்த விபரீதம்

அநுராதப்புரம் – பதவிய பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற  குளவி கொட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடு திரும்பியுள்ளனர்.
பதவிய பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று இடம்பெற்ற பூஜை வழிபாட்டின் போது குளவி கூடு ஒன்று கலைந்தது.
குளவி தாக்குதலுக்கு சுமார் 123 பேர் இலக்காகினர்.
அவர்களின் 85 பேர் மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பூஜை ஒன்றுக்காக சென்றிந்தவர்களே இந்த குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிப்படைந்த மாணவர்களுள், இன்றைய தினம் 5ஆம் ஆண்டு புலமைப் பரீட்சை எழுத இருந்த மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com