புலமைப்பரிசில் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான கௌரவிப்பு நிகழ்வு

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின்கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி காப்புறுதி திட்டத்தில் இணைந்துகொண்டுள்ள பாடசாலை மாணவர்களிற்கான புலமைப்பரிசில் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான கௌரவிப்பு நிகழ்வு யாழில் இன்று இடம்பெற்றது

சமூகவலுவூட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் கீழுள்ள பாதுகப்பு சபையின் ஊடாக இந்த செயற்றிட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் நிலையில் இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இன்று புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர்கூட்டத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை பாதுகாப்பு சபையின் பொது முகமையாளர் திருமதி பி.எச்.கே.டி.சில்வா பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்

இதன்படி யாழ் மாவட்டத்தில் இப்புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 90 கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஐந்து ஏ சித்திகளை பெற்ற மாணவர்களுக்கு ஐயாயிரம் தொடர்க்கம் ஐம்பதாயிரம் ரூபா வரையில் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.

அதேவேளை, சணச அபிவிருத்தி வங்கியூடாக கல்வி உபகரணங்கள் மற்றும் கொள்வனவு கூப்பன்கள் என்பனவும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது

அத்தோடு தேசிய பாதுகாப்பு சபையின் காப்புறுதி திட்டத்தை சரியான முறையில் செயற்படுத்திய 67 அரச உத்தியோகத்தர்களுக்கும் நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவில் கௌரவிக்கப்பட்டனர்.

புலமைப்பரிசில்

இந்நிகழ்வில், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன்இ தேசிய பாதுகாப்பு சபையின் பணிப்பாளர் தர்மலிங்கம் புஸ்கரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]