புறக்கோட்டை பொறுப்பதிகாரி இடமாற்றம்

புறக்கோட்டை பொறுப்பதிகாரி இடமாற்றம்

புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, உடன் அமுலுக்கு வரும் வகையில், மட்டக்களப்புக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவன் மரணமான சம்பவத்தை அடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஹப்புத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே நேற்று முன்தினம் அதிகாலை தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பகுதியில் வைத்து குறித்த இளைஞன் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், புறக்கோட்டை பொலிஸ்நிலைய சிறைக்கூடத்தில், 17 வயது இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டபோது கடமையில் இருந்த அதிகாரிகள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸ் தலைமையகத்தின் பிரதி பொலிஸ்மா அதிபரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]