புறக்கோட்டை ஆடையகத்தில் தீ

கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடையகம் ஒன்றில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை 12.45 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக 119 அவசர தகவல் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், தீயினால் எவ்வித உயிர் ஆபத்துக்களும் ஏற்படாத நிலையில், சொத்து இழப்புக்கள் தொடர்பில் இதுவரை கணிப்பிடப்படவில்லை.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவி்ல்லை. கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.