புறக்கணிப்பில் ஈடுபட்ட சு. க அமைச்சர்கள் அமைச்சரவையில்

கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பில் ஈடுபட்ட அமைச்சர்கள், இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இதனை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலரே, கடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு சமூகமளிக்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா யோசனைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

அதனையடுத்து, ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை பதவிநீக்கம்செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கபட்டது.

அதனையடுத்து, 6 அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்ட 16 உறுப்பினர்கள் தமக்கு வழங்கப்பட்ட பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

பின்னர், ஒன்றிணைந்த எதிரணியில் இணைவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]