புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 100வது பிறந்த நாள்

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 100வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் தி.நகர் ஹபிபுல்லா ரோட்டில் அமைந்துள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்துக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் பேசியது வருமாறு

nadigar samgam mrg birthday nadigar samgam mrg birthday nadigar samgam mrg birthday

நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியது,

தமிழகமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 100வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறது. எங்களுக்கு இந்த ஒரு சங்கத்தை உருவாக்கி அதற்கு ஒரு அடையாளம் கொடுத்து முகவரியும் கொடுத்து மிக பிரமாண்டமாக வழி அமைத்து கொடுத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். அவருடைய பிறந்த நாளை இந்த வருடம் முழுவதும் நாங்கள் கொண்டாட இருக்கிறோம். அவரால் நாம் பெருமைபடுவோம் என்றார் நாசர்.

nadigar samgam mrg birthday

நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் பேசியது

இன்று மக்கள் தலைவர் – புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பற்றி தமிழ் நாடு மட்டுமல்ல ஊர் உலகமே அறிந்த ஓர் விஷயம். மக்களுக்காக அவர் பாடுபட்டு , மக்களுக்காக அவர் செய்த விஷயங்களை இன்று வரை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இன்று நடிகர் சங்கம் முன்னால் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறோம். எம்.ஜி.ஆர் அவர்களின் செயல்பாடு போல் நாமும் நடக்க கற்றுக்கொள்ள வேண்டும். என்னால் முடிந்த அளவுக்கு நான் இன்று சமூக பணியாற்ற உந்துதலாக இருந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான் என்றார் நடிகர் விஷால்.

nadigar samgam mrg birthday nadigar samgam mrg birthday

மேலும் நடிகர் விஷால் பேசியது , கிட்டத்தட்ட ஜனவரி 5ஆம் தேதியில் இருந்து சமூக வலைதளங்களில் விஷால் ஜல்லிகட்டுக்கு எதிராக பேசினார் , பீட்டாவை ஆதரிக்கிறார் என்று கூறிவருகிறார்கள். பீட்டாவின் முழு அர்த்தம் எனக்கு தற்போது தான் தெரிந்தது. பீட்டாவை நான் ஆதரிக்கவில்லை , பீட்டாவுக்கு நான் விளம்பர தூதரும் இல்லை. இதை போன்று புரளியை பரப்புவது தவறான ஒன்றாகும். நான் ஒரு கருத்து சொல்வதென்றால் மைக் பிடித்தோ , பிரஸ் ரிலீஸ் மூலமாகவோ அல்லது என்னுடைய சமூக வலைதளத்தின் மூலமாகவோ நேரடியாக நான் கூறியிருப்பேன். ஜல்லிகட்டை நான் ஆதரிக்கிறேன். ஜல்லிக்கட்டு அடுத்த வருடம் முறையாக நடக்க நானும் களத்தில் இறங்கி போராடுவேன், ஜல்லிக்கட்டு நடக்க தனிப்பட்டமுறையில் முயற்சி செய்து வருகிறேன். விஷால் ஜல்லிகட்டை ஆதரிக்கிறார் என்றால் அதை அவர் நேரடியாக கூறினால் தான் அது உண்மையான ஒரு செய்தியாகும். சமூக தளங்களில் உள்ள யாரோ ஒருவர் கூறும் தவறான செய்தி உண்மையான ஒன்றாகாது. இங்கே இளைஞர்கள் போராடுவது கண்டிப்பாக மத்தியில் உள்ள அரசுக்கு கேட்டிருக்கும். கண்டிப்பாக அடுத்த வருடம் ஜல்லிக்கட்டு முறையாக நடக்க மத்திய அரசு அதற்க்கான நடவடிக்கைகளை எடுக்கும். நடிகர் சங்கத்துக்கும் பீட்டாவுக்கும் எந்த வித சமந்தமும் இல்லை இதை நான் நடிகர் சங்க பொது செயலாளராக கூறி கொள்ள விரும்புகிறேன் என்றார் நடிகர் சங்க பொது செயலாளர் விஷால்.

nadigar samgam mrg birthday nadigar samgam mrg birthday
Names :

தலைவர் நாசர்
துணை தலைவர் பொன்வண்ணன்
பொது செயலாளர் விஷால்
பொருளாளர் கார்த்தி
டிரஸ்டி ஐசரி கணேஷ்
டிரஸ்டி குட்டிபத்மினி
நடிகர் சத்யராஜ்
நடிகர் பிரபு
மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்
ராஜேஷ், A.L.உதயா, மனோபாலா, லலிதகுமாரி, அஜய் ரத்தினம், பிரேம், தளபதி தினேஷ், M.A.பிரகாஷ், கஜா மைதின்,
வேலூர் வாசுதேவன் & ஹேமச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்