நான்கு சமர்களை தொடர் வெற்றிக்கண்டது புனித தோமியர் : மீண்டும் ரோயலுக்கு தோல்வி

கொழும்பு ரோயல் கல்லூரிகளுக்கும் புனித தோமியர் கல்லூரிக்கும் இடையிலான 42ஆவது மஸ்டாங் கிண்ணத்துக்கான போட்டியில் புனித தோமியர் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு, கு.கு.இ விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் 11 ஓட்டங்களால் கொழும்பு புனித தோமியர் கல்லூரி வெற்றி வாகை சூடியிருந்தது.

போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் கல்லூரி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய, புனித தோமியர் கல்லூரி கல்லூரி 7 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

259 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ரோயல் கல்லூரி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டதால் 11 ஓட்டங்களால் கொழும்பு றோயல் கல்லூரி தோல்வியடைந்தது.

புனித தோமியர் கல்லூரி இதன்மூலம் நான்காவது தடவையாகவும் கொழும்பு றோயல் கல்லூரியை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]