புனித திரேசாள் மகளிர் கல்லூரியில் புதிய கட்டடங்கள் திறப்பு

யாழ். அச்சுஅயல் பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் வேலி புனித திரேசாள் மகளீர் கல்லூரியில் புதிய இரு வகுப்பறைக் கட்டிடங்கள் இன்று (28) திறந்து வைக்கப்பட்டன.

அரசாங்கத்தின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் அச்சுவேலி புனித திரேசாள் மகளீர்; கல்லூரியில் சுமார் 2.7 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட புதிய இரு கட்டிடங்களை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுப்பிள்ளை இராதாகிருஸ்ணன் மற்றும் யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் மற்றும் சிவஸ்ரீ கு.வை. வைத்தீஸ்வரக்குருக்கள் , வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஆகியோர் இணைந்து தொழில்நுட்பகூடக் கட்டிடத் தொகுதி மற்றும் ஆரம்ப பிரிவு கற்றல் வள நிலைய கட்டிடத் தொகுதி ஆகியவற்றினைத் திறந்து வைத்தனர்.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரிய ஜீவந்தி தலைமையில் நேற்றுக் காலை (28) 8.30 மணியளவில் ஆரம்பமாகிய இந் நிகழ்வில், பாடசாலைமாணவர்களின் பாண்ட் இசை வாத்தியங்கள் முழுங்க, அணிவகுப்பு மரியாதையுடன், விருந்தினர்கள் மலர்மாலை அணிவித்து பாடசாலை வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
அதனைத் தொடர்;ந்து, தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் பி.ஜே. ஜெபரட்ணம் மற்றும் இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் சிவ.ஸ்ரீ.கு.வை.க. வைத்தீஸ்வரக்குருகள் ஆகியோரின் ஆசியுரைகளும் இடம்பெற்றன.

பாடசாலையின் 125 ஆம் ஆண்டினை எட்டவுள்ள நிலையில், இப்பாடசாலை அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு, மாணவர்களுக்கான தொழில்நுட்ப கூட கட்டிடத் தொகுதி மற்றும் ஆரம்ப பிரிவு கற்றல் வள நிலையம் என்பன புதிதாக அமைக்கப்பட்டு, இன்றைய தினம் (28) மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இறுதியாக நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு பாடசாலை அதிபர் மரிய ஜீவந்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில், வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரன், கல்வி இராஜாங்க அமைச்சரின் பாரியார் திருமதி.குகாநந்தினி இராதாகிருஸ்ணன் உட்பட வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]