புத்த மதத்தை பின்பற்றும் அக்‌ஷரா ஹாசன்?

கமல்ஹாசனின் இளையமகள் அக்‌ஷரா தற்போது அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் நடிக்கிறார். அந்த அனுபவம் பற்றி அக்‌ஷராவிடம் கேட்ட போது…

“இயக்குனர் சிவா என்னிடம் ‘விவேகம்’ கதையை சொன்ன போது மிகவும் பிடித்துப்போய்விட்டது. எனவே உடனே இதில் நடிக்க சம்மதித்தேன். இந்த வேடத்தில் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அஜித்துடன் இதில் பணிபுரிந்தது ஒரு அருமையான அனுபவம். அவரிடம் மிகப்பெரிய நடிகர் என்ற எண்ணம் துளியும் கிடையாது. எல்லோருக்கும் உதவியாக இருப்பார். எங்கள் இருவருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம். எனவே அது பற்றி படப்பிடிப்பு இடைவெளியில் நிறைய பேசுவோம். என்னை அக்‌ஷராஜி என்று மரியாதையுடன் அழைத்தார். அஜித் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். அதை நேரில் பார்த்து அறியும் வாய்ப்பு ‘விவேகம்’ படப்பிடிப்பின் போது கிடைத்தது.

பல்கேரியா, செர்பியாவில் கடும் குளிரிலும் உறைபனியிலும் இந்த படக்குழு மிகவும் கடுமையாக உழைத்தனர். படம் வெளியாகும் நாளை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

சினிமா இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் என்ஆசை. நடிகையாகவும் வந்து விட்டேன். இரண்டையும் தொடர வேண்டும். அப்பா, அக்கா, நான் மூவரும் எல்லா வி‌ஷயங்களில் ஒத்துப்போனாலும் சில வி‌ஷயங்களில் மாறுபட்டவர்கள். அப்பா கடவுள் நம்பிக்கை இல்லாதவர், சுருதி கடவுள் நம்பிக்கை உள்ளவர்.

அப்பாவை போல எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் நம்புகிறவர்களை மதிப்பேன். எனக்கு புத்தர் போதனை பிடிக்கும். புத்த மத வழிபாடு பிடிக்கும். அதை செய்கிறேன். ஆனால் புத்த மதத்தில் சேரவில்லை” என்றார்.

அக்‌ஷராவின் இந்த பதிலுக்கு கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் வேறு மதத்திற்கு மாறிவிட்டாயா? லவ் யு, இன்பமாய் வாழ்க என்று குறிப்பிட்டிருக்கிறார்.