புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விஷேட புகையிரதசேவை!!

தமிழ் -சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களின் நலன் கருதி இன்று(07) முதல் விஷேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று(07) முதல் எதிர்வரும் 17ம் திகதி வரை இந்த சேவை முன்னெடுக்கப்படும் என குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை முதல் கொழும்பு கோட்டையில் இருந்து பண்டாரவளை மற்றும் மஹவை வரை குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் விஷேட புகையிரத போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு கோட்டை மற்றும் மருதானையில் இருந்து காலி, மாத்தறை வரையிலும், கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலும் விஷேட புகையிரத சேவைகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறே, எதிர்வரும் 15 – 17ம் திகதி வரையில் மாத்தறையில் இருந்து மருதானை வரையிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வரையிலும் மற்றும் பண்டாரவளை மற்றும் காலியில் இருந்து கொழும்பு வரையிலும் விஷேட புகையிரத போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com