புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏழு பேர் பலி – சென்னையில் சோகம்!

தமிழ்நாடு-சென்னையில் வெவ்வேறு பகுதிகளில் அடம்பெற்ற விபத்துக்களில் 7 பேர் பலியாகியுள்ளதாகவும் மேலும் 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னையின் பல பகுதிகளில் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தர். குறிப்பாக மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை பகுதிகளில் நள்ளிரவில் திரண்ட ஏராளமானோர் கூடியிருந்தனர்.

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடந்த பல்வேறு விபத்துகளில் 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]