புத்தாண்டின் முதல் 100 நாட்களில் , 100 வேலைத்திட்டங்கள்

புத்தாண்டின் முதல் 100 நாட்களுக்குள் பாரிய 100 வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பாட்டலி ச்சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் அவற்றை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. புத்தாக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கி, அதற்கு முதலீடுகள் செய்யும் செயற்பாடுகளினூடாககுறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை அபிவிருத்தி செய்து அதனூடாக இறக்குமதியை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

புதிய ஏற்றுமதி உலகை வெற்றிக்கொள்வதற்காக புத்தாக்கத்திற்கு முன்னுரிமை வழங்கும் தேவை காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நகரமயமாக்கல் தொடர்பிலும் கூடுதல் கவனம்செ லுத்தப்பட்டுள்ளது. நகர நீர் முகாமைத்துவம், கழிவு முகாமைத்துவம் மற்றும் குடிசைவாழ் மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட நகரமயமாக்களுக்கு எதிராக காணப்படும் பிரச்சினைகளுக்கு போதுமான முதலீடுகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் பாட்டலி ச்சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.