புத்தளத்தில் கோரவிபத்து – அக்கா கண்முன்னே தம்பியின் உயிர் பறிபோனது – அதிர்ச்சி வீடியோ!

புத்தளத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் சிறுவன் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகி உள்ளார் இந்த விபத்து புத்தளம் – கொழும்பு வீதியின் நாகவில பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

புத்தளம், நாகவில்லுவ பிரதேசத்தை சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தனது சகோதரியுடன் நாகவில்லுவ பிரதேசத்தில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றுக்கு சென்று மீண்டும் வெளியே வரும் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வேன் வாகனத்தின் சாரதி தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.