புத்தளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்த கோரி, யாழ். நகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

புத்தளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்த கோரி, யாழ். நகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு உட்பட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கிளின் புத்தளம் உள்ளிட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தின் முன்பான நேற்று (23) மதியம் 1.30 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
குப்பைப்கு எதிராக கடந்த 50 நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அம்மக்களுக்கு ஆதரவு வழங்கு முகமாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புத்தளம் நகரில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள அருவக்காடு பகுதியில் 64 ஏக்கர் நிலத்தில் கொழும்பில் இருந்து குப்பைகளைக் கொட்டுவதற்காக அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றது.

ஆரசாங்கத்தின் நடவடிக்கையைக் கண்டித்து, வெளிநாட்டின் குப்பைகளை எமது பிரதேசத்தில் கொட்ட வேண்டாம். சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரச்சினைகளை புத்தளம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டாமென்றும், குப்பைகளை மீள் சூழற்சிக்கு உட்படுத்தி அந்தப்பகுதியிலேயே கொழும்பு குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

புத்தளத்தில் புத்தளத்தில்

மீறி புத்தளத்தில் குப்பைகளை கொட்டினால், பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]