புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் கனடா பொலிஸார் விசாரணை

கனடாவில் உள்ள புத்தர் சிலை ஒன்று சேதமாக்கப்பட்டமை தொடர்பில் ஓட்டாவா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையிலிருந்து கொண்டுசெல்லப்பட்டு, ஒட்டாவாவின் ஹெரோன் வீதியில் உள்ள ஹில்டா ஜேத்தவனராமய மடாலயம் மற்றும் தியான நிலையத்தின் முன்பாக வைக்கப்பட்ட புத்தர் சிலையே உடைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கும் நேற்றுக் காலை 7.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குறித்த சிலையின் தலைப் பகுதி உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]