புத்தர் உருவம் பொறிக்கப்பட்ட சேலைகளை வைத்திருந்தவர் கைது!!

புத்தர் உருவம் பொறிக்கப்பட்ட சேலைகளை வைத்திருந்த ஜவுளிக் கடை உரிமையாளர் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை நகர் பகுதியிலுள்ள உடுதுணிகள் வியாபார நிலையமொன்றில் இருந்த சேலைகளில் புத்தரின் உருவம் வரையப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த தகவலுக்கமைவாக குறித்த ஜவுளிக் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை, ராஜவரோதய வீதியை அண்டியுள்ள ஜவுளிக் கடையின் உரிமையாளரான 61 வயதுடைய வர்த்தகர் என்றும் தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த கடையை சோதனையிட்ட போது அங்கிருந்து 10 சேலைகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]