புத்தரின் தலை பொறிக்கப்பட்ட ஆடைகளினால் திருகோணமலையில் பெரும் பதற்றநிலைமை

திருகோணமலை நகரிலுள்ள பிரதான ஆடை வர்த்தக நிலையத்தில் புத்தரின் தலை பொறிக்கப்பட்ட ஆடைகள் காணப்பட்டமையால், இன்று (03) பிற்பகல் 3 மணியளவில் பதற்ற நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆடை வர்த்தக நிலையத்தில் ஐந்து பீஸ் கொண்ட ஆடைகளில், புத்தரின் தலை பொறிக்கப்பட்டமையால், கடையை அண்மித்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி்க்கின்றனர்.

சம்பவ இடத்துக்கு, திருகோணமலை ஜெயசுமராமய விகாரையின் விகாராதிபதி சென்றதாகவும் அத்துடன், குறித்த இடத்துக்கு திருகோணமலை தலைமையகப் பொலிஸார் விரைந்து சென்றதுடன், அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

இதேவேளை, குறித்த வர்த்தக நிலையத்தில் காணப்பட்ட புத்தரின் தலை பொறிக்கப்பட்ட ஆடைகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் திருகோணமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கடையின் உரிமையாளரை, பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வாக்கு மூலம் பெற்று வருவதாகவும் பொலிஸார் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

புத்தரின் தலை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]