புதையல் தோண்டிய தேரர் கைது

தேரர் கைது

பனாரே 8ஆவது மைல்கல் பகுதி போத்தியாவெவ பிரதேசத்தில் உள்ள விகாரையில் புதையல் தோண்டிய தேரரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விகாரையின் விகாராதிபதியான தேரரே இவ்வாறு இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, புதையலை இனங்காண கொண்டு வரப்பட்ட 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்கேன் இயந்திரத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கிடைக்கப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த இடத்தை பொலிஸார் சுற்றிவளைத்த நிலையில், புதையில் தோண்டிக் கொண்டிருந்த இருவர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கைதுசெய்யப்பட்ம தேரரரை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]