புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது

மஹவெல, மில்லவான பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24, 46, 29, 35 மற்றும் 37 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாவனெல்ல, தொபகஹவெல, மாத்தளை அகுரம்பட மற்றும் திக்வெல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிமிருந்து புதையல் அகழ்வுககு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களை நாவுல நீதவான் நீதிமன்றில் இன’றைய தினம் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள மஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]