புதையல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேரமடுவ காட்டுப் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்போபுர பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சட்ட விரோத அகழ்வில் 7 நபர்கள் ஈடுபட்டதாகவும், அவர்களில் மூவர் தப்பிச்சென்றதாகவும் அவர்கள் தேடும் பணி தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இரண்டு வாரங்களாக 30 அடிவரை அகழ்ந்துள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]