புது முகங்களை இயக்கி வெற்றி அடையும் இயக்குனர் சுசீந்திரன்

புது முகங்களை இயக்கி வெற்றி அடையும் இயக்குனர் சுசீந்திரன்

NenjilThunivirundhal

நட்பை மையப்படுத்தி சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் “நெஞ்சில் துணிவிருந்தால்”.

இந்த திரைப்படத்தில் சந்திப், விக்ராந்த் ஹீரோவாகவும். மெஹரின் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

NenjilThunivirundhal

இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இமான்-சுசீந்திரன் கூட்டணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக இணைந்துள்ளனர்.

NenjilThunivirundhal

இந்த திரைப்படம் பற்றி சுசீந்திரன் கூறுகையில்,

படத்தில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது.என்னுடன் எல்லா படத்திலும் இருக்கும் சூரி இந்த படத்திலும் இருக்கிறார்.சூரிக்கு என்னுடன் இது ஏழாவது படம். இந்த படத்தில் சூரியின் பங்கு அதிகமாக இருக்கும். மிகவும் ஆச்சரியப்படுத்தும் நபர்களில் ஒருவர் சூரி.வெண்ணிலா கபடி குழுவுக்கு பின் லட்சுமணனுடன் மீண்டும் இணையும் படம்.

NenjilThunivirundhal

இந்த படத்தின் கலை இயக்குநராக சேகர் பணியாற்றியுள்ளார். நிச்சயமாக இந்த படம் அனைவருக்கும் வெற்றி படமாக அமையும். இந்த படம் என்னுடைய பாணியில் அமைந்ததாக இருக்கும். என்னுடைய அனைத்து படங்களிலும் சமூக நீதி இருக்கும். ராஜபாட்டை ஒரு தோல்வி படமாக இருந்தாலும் அதில் ஒரு சமூக அக்கறை இருக்கும். மெர்சல் படத்தில் இருக்கும் சமூக அக்கறை கொண்ட செய்தியை போன்று ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்திலும் ஒரு அழுத்தமான சமூக அக்கறை கொண்ட செய்தி உள்ளது.

NenjilThunivirundhal

இந்த படத்தில் விக்ராந்த் மிக சிறப்பாக நடித்துள்ளார் கண்டிப்பாக அடுத்த வருடத்தில் மிக முக்கியமான நடிகராக வளம் வருவார். புது முகங்களை கொண்டு படம் எடுப்பது தானாக அமைகின்றது. என்னுடைய library-ல் ‘வெண்ணிலா கபடி குழு’, ‘அழகர் சாமியின் குதிரை’ , ‘ஜீவா’ ,’ மாவீரன் கிட்டு’ போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் இது போன்ற படங்கள் தான் காலத்திற்கும் நிற்கும்.

NenjilThunivirundhal

மிக பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தால் அப்படம் வெற்றியடையும் போது அந்த வெற்றி நடிகரை மட்டுமே சாரும். புது முகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடையும் போது அந்த வெற்றி அப்படத்தின் இயக்குனரையே சேரும்.” என குறிப்பிட்டார்.

NenjilThunivirundhal

மேலும் “நெஞ்சில் துணிவிருந்தால்” நவம்பர் 10 வெளியாகின்றது. இது விறுவிறுப்பான படமாக அமையும்.’ நான் மகான் அல்ல’, பாண்டியநாடு’ போன்ற படங்களை போல் கிளைமாக்ஸ் இருக்கும்.இந்த படத்தின் கதை உங்களை ஈர்க்கும் விதமாக இருக்கும்.என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

NenjilThunivirundhal NenjilThunivirundhal NenjilThunivirundhal NenjilThunivirundhal NenjilThunivirundhal NenjilThunivirundhal NenjilThunivirundhal NenjilThunivirundhal NenjilThunivirundhal

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]