புது படங்கள் வெளிவராது தமிழ்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு

புது படங்களை வெளியீடு செய்ய போவதில்லை என தமிழ்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவினை அறிவித்திருக்கிறது. திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிப்பரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதினை கண்டித்து டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு எதிராக நேற்று (மார்ச் 01) முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்திருக்கிறார்களாம் .
மிக அதிகப்படியான கட்டணத்தை குறைக்க கூறி பல தடவைகள் நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டும் எந்த பயனும் இல்லாத நிலையில் தென்னிந்திய திரையுலகைச்சார்ந்த கர்நாடகா , ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளா சங்கங்களும் இந்த பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் வரை எந்த திரைப்படத்தினையும் வெளியிடுவதில்லை என ஒட்டு   மொத்தமாக முடிவு செய்திருக்கிறார்கள்.
எவ்வாரானபோதிலும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கமும் வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டனர்.திரையரங்குகளில் ஏற்கனவே உள்ள படங்களை காட்சிப்படுத்த போவதாகவும், புதுப்படங்களை தருபவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து திரையிடுவோம் என்றும் புதுப்படங்கள் கிடைக்காவிட்டால் பழைய படங்களையும், அந்நியமொழி படங்களையும் திரையிடப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் ஆந்திரா திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]