புதுவருட நாட்களில் குறைந்தளவு மின்சார பாவனை

புதுவருட காலமான கடந்த இரண்டு நாட்களில் மின்சாரத்துக்கான கேள்வி குறைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்;ளது.

ஏனைய நாட்களை விட கடந்த இரண்டு நாட்களில் 30 முதல் மின்சாரத்துக்கான கேள்வி குறைந்திருந்ததாக அமைச்சின் பணிப்பாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

புதுவருட விடுமுறை காரணமமாக பெருமளவான நிறுவனங்கள் மூடப்பட்டமை காரணமாக மின்சாரத்துக்கான கேள்வி குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் பாதிக்கப்பட்டிருந்த இயந்திரத்தின் ஊடாக மீண்டும் 21ஆம் திகதி முதல் மின்னுற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com