புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

கிளிநொச்சி புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆட்டோ உரிமையாளரான கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய ப.தனுசன் என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று (21) மாலை கிளிநொச்சியிலிருந்து, கிளிநொச்சி மேற்கு ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச் சென்ற பின்னர் அவர் காணாமல் போனதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த இளைஞன் புதுமுறிப்புக் குளத்திலிருந்து இன்று (22) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]