புதிய ஹெல்மட் வாங்கபோறீங்களா?

பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்த்து பிரிவு  இன்றைய தினம் ஒரு முக்கியமான அறிவித்தலை விடுத்துள்ளது. எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழ் இல்லாத மற்றும் பாதுகாப்பற்ற தலைக்கவசங்கள் (ஹெல்மட்) பயன்படுத்துவதற்கு  இவ்வருடம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதென அறிவித்துள்ளது. அதனால் தலைகவசம் வாங்கும் போது கூடுதல் அவதானம் செலுத்துமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது கையடக்க தொலைபேசி உரையாடுசெயற்பாடும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் சேனக்க கமகே தெரிவித்தார். தற்போது இடம்பெறுகின்ற வாகன விபத்துகளில் மோட்டார் சைக்கிள் விபத்துகள் அதிகரித்துள்ளன. பாதுகாப்பற்ற தலைக்கவசங்களை அணிவதினால் விபத்தின் போது தலையில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கிலும் தரம் குறைந்ததும் பாதுகாப்பற்றதுமான தலைக்கவசங்களை ஒழிக்கும் நோக்கிலும் புதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக உப பொலிஸ் பரிசோதகர் சேனக்க கமகே மேலும் தெரிவித்தார்.