புதிய வகை கடவுச்சீட்டு அறிமுகம்

கடவுச்சீட்டுபுதிய வகை ‘கடவுச்சீட்டு’க்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் எம் என் ரணசிங்க தெரிவித்துளார்.

குறித்த கடவுச்சீட்டினை சிவில் விமானசேவைகள் அமைப்பின் தரத்திற்கு அமைவாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தயாரிப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் குறித்த கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க முடியும் எனவும் புதிய கடவுச்சீட்டை அச்சிடுவதற்கு பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள தோமஸ் ரிலாறு என்ற பிரிட்டிஷ் நிறுவனம் அமைச்சரவையின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]