புதிய ரயில் கட்டணப்பட்டியல் வெளியானது

புதிய ரயில் கட்டணப்பட்டியல் வெளியானது

புதிய ரயில் கட்டணப்பட்டியலை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் 15 வீதத்தினால் இந்தக்கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தகவலை ரயில்வே திணைக்களத்தின் பிரதி வணிக அத்தியட்சகர் என்.ஜே. இத்திபாலகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஆரம்பக் கட்டணத்திற்கான தூரம் 9 கிலோமீட்டரிலிருந்து 07 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து ஹூனுபிட்டியவரை இதுவரைக்காலம் 10 ரூபாவாகக் காணப்பட்ட ரயில் கட்டணம், புதிய திருத்தத்திற்கு அமைய 15 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான கட்டணம் 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து பதுளைக்கான கட்டணம் 70 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட கட்டண திருத்தம் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி வணிக அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]