புதிய பிரதம நீதியரசராக நளின் பெரேரா நியமனம்

புதிய பிரதம நீதியரசராக நளின் பெரேரா நியமனம்

புதிய பிரதம நீதியரசராக நளின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் தலதா அத்துகோரலவால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதம நீதியரசராக பதவி வகித்துவந்த பிரியசாத் டெப் இன்றுடன் ஓய்வுபெற்றுள்ள நிலையில், இந்த புதிய நியமனம் இடம்பெற்றுள்ளது.

புதிய பிரதம நீதியரசர் பதவிக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு சபை அங்கீகாரம் அளித்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடியது.

இந்நிலையில், குறித்த கூட்டத்தில் பிரதம நீதியரசருக்கான வெற்றிடம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, அப்பதவிக்கான ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அங்கீகாரமளிக்கப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இதன்படி அரசியலமைப்பு சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]