முகப்பு News புதிய பிரதமர் இம்ரான் கானின் அமைச்சரவையில் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

புதிய பிரதமர் இம்ரான் கானின் அமைச்சரவையில் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

புதிய பிரதமர் இம்ரான் கானின் அமைச்சரவையில் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுள்ள நிலையில், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.

இஸ்லாமாபாத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி ஜனாதிபதி மன்மூன் ஹுசைன் முன்னிலையில் அவர்கள் சத்தியப் பிரமாணம் செய்துக் கொண்டனர்.

பிரதமர் இம்ரான் கானின் அமைச்சரவையில் 15 அமைச்சர்களும், ஐந்து ஆலோசகர்களும் பதவியேற்றுள்ளனர்.

அதன்படி பாதுகாப்பு அமைச்சராக பர்வெஸ் கட்டெக் மற்றும் நிதியமைச்சராக அசாட் உமர் ஆகியோர் நியமிக்கப்பட்டதுடன், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷாஹ் மெஹ்மூட் குரேஷி மீண்டும் அதே பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்திருந்த இம்ரான் கான், கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதி நடைபெற்றிருந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக பதவியேற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com