புதிய தேர்தல்முறை அடிப்பட்ட மக்களின் அபிவிருத்தியை உறுதிப்படுத்தும்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வட்டார முறையிலான தேர்தல், அடிமட்ட மக்கள் மத்தியில் அபிவிருத்தியை உறுதிப்படுத்தக்கூடியதாக அமையும் என, தழிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக தெளிவுப்படுத்தும் கருத்தரங்கு யாழ். நல்லூர் பகுதியில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்முறை 25 வீதமான பெண்கள் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட வேண்டியது கட்டாயமானதுடன், தற்போது பெண்களின் பங்களிப்பு சமூகத்திற்கு அவசியம் எனும் வகையில் தேர்தலிகளில் பெண்களின் விகிதாசாரம் அதிகரிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]