புதிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவித்தல்

புதிய தேசிய அடையாள அட்டைபுதிய தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் போது ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தால் பதிவு செய்யப்பட்ட புகைப்படப் பிடிப்பாளரிடமிருந்து புகைப்படங்களைப் பெறுமாறு ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்மாதம் முதல் புதிய தேசிய அடையாள அட்டைக்காக தேசிய சிவில் விமான ஒழுங்கமைப்பு தரத்திலான புகைப்படம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய புதிய இலத்திரனியல் அடையாள அட்டைக்கான உரிய புகைப்படம் எடுத்தல் தொடர்பாக தகைமை உடைய புகைப்பட நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.Sri Lanka NIC

2017-09-01ம் திகதியிலிருந்து தங்களால் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் போது கீழ்க்காணும் தரத்திலான புகைப்படத்தினை உபயோகப்படுத்தும்படி கோரப்பட்டுள்ளது.

இவ்வாறான புகைப்படத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக ஆட்பதிவுத் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட புகைப்படப்பிடிப்பாளரிடம் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

9, 16 மற்றும் 17 என்னும் பிரிவுகளின் நோக்கங்களுக்காகச் சம்ர்ப்பிக்கப்படுவதற்குத் தேவைப்படுத்தப்படும் அத்தகைய ஒவ்வொரு நிழற்படமும் பின்வரும் பரிமாணங்களையும் அளவுக் குறிப்பீடுகளையும் நியமங்களையும் மற்றும் தரத்ததையும் கொண்டிருத்தல் வேண்டும்.

நிழற்பட அளவானது அகலத்தில் 35 மில்லிமீற்றர் உயரத்தில் 45மில்லிமீற்றர் என்பதாக இருத்தல் வேண்டும் என்பதுடன் நிழற்படத்தின் தரமானது ஆட்களைப் பதிவு செய்தல் ஆணையாளர் தலைமை அதிபதியினால் ஏற்பாடு செய்யப்படும் மென்பொருளுக்கிணங்க அல்லது அறிவுறுத்தல்களுக்கிணங்க இருத்தல் வேண்டும்.

முகமானது திறந்த மற்றும் தெளிவாகத் தென்படக் கூடிய கண்களுடனும் மூடிய வாயுடனும் சிரிப்பில்லாமலும் சுயநிலை முகக் குறிப்புடன் இருத்தல் வேண்டும்.

தலைமுடியானது முக்கத்திலிருந்து விலகி இருத்தல் வேண்டும் என்பதுடன் முகத்தின் விளிம்புகள் தெளிவாகத் தென்படக் கூடியனவாக இருத்தலும் வேண்டும்.

மூக்குக் கண்ணாடிகளிலிருந்து பிரதிபலிப்புகள் எவையும் தென்படக்கூடியனவாக இருத்தலாகாது.

வில்லைகளினூடாக கண்கள் தெளிவாக தென்படக்கூடியனவாக இருத்தல் வேண்டும் என்பதுடன் தெளிவான வில்லைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

வெளிச்சமிடுகை ஒரு சீரானதாக இருத்தல் வேண்டும் என்பதுடன் நிழல்களை கூசொளியை அல்லது பளிச்சிட்டுப் பிரதிபலிப்புகளை காண்பித்தலுமாகாது.

நிழற்படத்தின் காட்சிப்படுத்தலும் வெண்ணிறப் பின்புலமும் விண்ணப்பகாரரின் இயற்கையான தோல்நிறத்தைப் பிரதிபலித்தல் வேண்டும்.

தோற்றநிலை நேராக இருத்தல் வேண்டும் என்பதுடன் முகமும் தோள்களும் நிழற்படக் கருவிக்கு நடுவிலும் எல்லாப்புறமும் சரிசமமாகவும் இருத்தலும் வேண்டும்.

பின்னணியானது ஒரு சீராகவும் அலங்காரங்கள் இன்றியும் வடிவங்கள் இல்லாமலும் இளநீல நிறத்திலும் இருத்தல் வேண்டும்.

உருவமானது தெளிவாகவும் கூர்மையாகவும் ஒருநிலைப்படுத்தப்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்.

நிழற்படமானது உயர்தொழில்சார் அச்சிடும் ஆய்வுகூடத்தைப் பயன்படுத்தி நிறத்தில் அச்சிடப்படுதல் வேண்டும்.

எவ்வகையிலும் மாற்றப்படுத்தலாகாது என்பதுடன் விண்ணப்பகாரரின் இயற்கை நிலையில் எடுக்கப்படுதலும் வேண்டுமெனவும் கேட்கப்பட்டுள்ளனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]