புதிய தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் நியமனம்

புதிய தூதுவர்கள் மூவரும் இரண்டு உயர் ஸ்தானிகர்களும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனம் தொடர்பான ஆவணங்களை கையளித்தனர்.

நியமனம்

இன்றைய தினம் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கனடா, ரஷ்யா ,மாலைத்தீவு ,பாகிஸ்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு Mr. David Mckinnon – கனடா உயர்ஸ்தானிகர், Mr. Yuri B Materiy – ரஷ்ய தூதுவர்,Mr. Mohamed Hussain Shareef – மாலைத்தீவு தூதுவர், Gen (Retd) Shahid Ahmed Hashmat – பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், Mr. Hussein EL Saharty – எகிப்து தூதுவர் ஆகியோர் புதிதாக நியமனம் பெற்றனர்.

நியமனம்

குறித்த நிகழ்வின் போது வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இருதரப்பு கூட்டுறவை மேலும் பலப்படுத்த புதிய தூதுவர்கள் அர்ப்பணிப்புடன் உழைப்பார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கைக்கும், புதிய தூதுவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

நியமனம்

மேலும் இலங்கையின் மத்திமப் போக்குடைய வெளிநாட்டுக்கொள்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]