புதிய தீர்மானத்தில் வார்த்தைகளை நீர்த்துப்போக செய்வதற்கு டெல்லிக்கு தூதுவிடும் கொழும்பு

இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள புதிய தீர்மானத்தில் சொற் பிரயோகங்களை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இராஜதந்திர வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அத்துடன், அரசு இவ்வாறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதை கொழும்பில் இருந்து வெளியாகும் பிரபால ஆங்கில வார நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு மனிதவுரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கும்படி இணை அனுசரணை வழங்கய நாடுகளிடம் இலங்கை அரசு விசேட பேச்சுகளையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுவரும் சூழலில் புதிய தீர்மானத்தில் வார்த்தைகளை நீர்த்துப்போகச் செய்ய இந்தியாவுக்கும் அரசின் தூதுகள் பறந்தவண்ணம் உள்ளன.
எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைத் தொடர்பான அறிக்கையை ம ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பிக்கவுள்ளார். இதனையடுத்து மறுநாள் 23ஆம் திகதி 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு இரண்டு வருடம் கால அவகாசத்தை வழங்கும் தீர்மானம் அமெரிக்காவால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.