புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீடு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியிடும் நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் புதன்கிழமை (14) நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், க.கோடீஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி சிரேஷ்ட பிரதித் தலைவருமான பொன்.செல்வராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், வணபிதா அல்போன்ஸ் மேரி, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கோ கருணாகரம், நி.இந்திரகுமார், மா.நடராசா, த.கலையரசன், மு.இராஜேஸ்வரன், ஏழுத்தாளர் வாகரை வாணன் இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் உருவாக்கப்பட்ட சுதந்திரன் பத்திரிகை நாட்டின் அசாதாரண நிலை காரணமாக வெளிவராத நிலையில் தற்போது அது புதிய பரிணாமத்தில் புதிய சுதந்திரன் எனும் பெயரில் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]