புதிய சிக்கலில் அடுத்த வருட ஐ.பி.எல் தொடர்!

எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் அளவில் ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரை இந்தியாவிலேயே நடத்துவதா? அல்லது வெளிநாடு ஒன்றில் நடத்துவதா? என்பது குறித்த வாதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச விளையாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மே மாத இறுதியில் இங்கிலாந்தில் உலக கிண்ண ஒருநாள் தொடர் ஆரம்பமாகின்ற நிலையில், அந்த தொடருக்கு பாதிப்பு ஏற்படாமல் முற்கூட்டியே ஐ.பி.எல்.போட்டிகளை நிறைவு செய்ய ஆலோசிக்கப்படுகிறது.

போட்டித் தொடரை உள்நாட்டிலா அல்லது வெளிநாட்டிலா நடத்துவது என்பது தொடர்பில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையும், அணி உரிமையாளர்களும் இன்னும் இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் இரண்டு வாரங்களில் ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் ஏலமெடுப்பு ஆரம்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]