புதிய கிரகத்திற்கு பெங்களூரு மாணவியின் பெயர்

பெங்களூருவை சேர்ந்த சாஹிதி பிங்காலி அங்குள்ள இன்வென்ட்சர் அகாடெமியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அறிவியல் துறையில் ஆர்வம் மிகுந்த சாஹிதி, தேசிய, சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விருதுகளை குவித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவின் மாசசூசட்ஸ் லிங்கன் ஆய்வகம் நடத்திய சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்பு போட்டியில் பங்கேற்றார்.

உலகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் மிகப்பெரும் அறிவியல் போட்டியான இதில், சாஹிதி சமர்ப்பித்த கட்டுரை ஆய்வாளர்களால் முதல் மூன்று இடங்களுக்குள் தேர்வு செய்யப் பட்டுள்ளது.

உலகமெங்கும் மாசடைந்து வரும் நீர் நிலைகளை தூய்மையாக பாதுகாப்பது தொடர்பான நவீன முறையை சாஹிதி கண்டறித்துள்ளார்.

இதன் மூலம் ஆறு, ஏரி, குளங்களில் உள்ள நீரின் தூய்மை தரத்தை மொபைல் செயலி மூலமாக கண்காணிக்க முடியும்.

பெங்களூருவில் மாசடைந் துள்ள வர்தூர் ஏரியை சோதித்து, அதைத் தூய்மைப்படுத்துவது தொடர்பாக சாஹிதி ஆய்வு செய்துள்ளார்.

இந்த கண்டு பிடிப்பை ஏற்றுக்கொண்ட மாசசூசட்ஸ் லிங்கன் ஆய்வகம், விண்வெளியில் அடையாளப்படுத்தப்படும் சிறிய கிரகத்துக்கு சாஹிதி பிங்காலியின் பெயரை சூட்டப் போவதாக அறிவித்துள்ளது.

இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அவரது குடும்பத்தாரும், பள்ளி நிர்வாகமும் சாஹிதிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இதேபோல பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட‌ சமூக வலைத் தளங்களிலும் சாஹிதியின் சாதனைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]