புதிய ஐந்து இராஜதந்திரிகள் நியமனக் கடிதங்களை கையளித்தனர்

புதிய ஐந்து இராஜதந்திரிகள் நியமனக் கடிதங்களை கையளித்தனர்
ஜனாதிபதி – புதிய இராஜதந்திரிகள் சந்திப்பு

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து இராஜதந்திரிகள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று (25) பிற்பகல் கையளித்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையில் வைத்து குறித்த ஆவணங்களை இராஜதந்திரிகள் கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

மொசம்பிக் நாட்டின் உயர்ஸ்தானிகரும் சுவீடன், பின்லாந்து, சவூதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் தூதுவர்களுமே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையுடன் நாட்டின் அபிவிருத்திக்காக உலகின் சகல நட்பு நாடுகளினதும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளல் தமது எதிர்பார்ப்பாகும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள தூதுவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

நிகழ்வின்போது புதிய இராஜதந்திரிகளிடையே உரையாற்றுகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதனை தெரிவித்துள்ளார்.

புதிய இராஜதந்திரிகளின் பெயர் விவரங்கள்

01- Mr. Ermindo Augusto Ferreira – மொசம்பிக் நாட்டின் உயர்ஸ்தானிகர்
02- Mr. Klas Molin – சுவீடன் தூதுவர்
03- Mr. Harri Kamarainen – பின்லாந்து தூதுவர்
04- Mr. Abdulnaser H.Al Harthi – சவூதி அரேபிய தூதுவர்
05- Mr. Augusto Montiel – வெனிசுலா தூதுவர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]