புதிய உள்ளுராட்சி அதிகார சபைத் தேர்தல் விழிப்புணர்வு

புதிய உள்ளுராட்சி அதிகார சபைத் தேர்தல் விழிப்புணர்வு

தேர்தல் விழிப்புணர்வு

புதிய உள்ளுராட்சி அதிகார சபைத் தேர்தலில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஏறாவூர் நகரில் முன்னெடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா “ஷெட்” நிறுவனத்தின் Sri Lanka SHED Foundation தலைவர் கே. அப்துல் வாஜித் தெரிவித்தார்.

இதன்போது மார்ச் 12 ஜனநாயக விழிப்புணர்வு இயக்கத்தினால் வெளியிடப்பட்ட “புதிய உள்ளுராட்சி அதிகார சபைத் தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாசாரமொன்றைக் கட்டியெழுப்புவோம்” சிந்தியுங்கள், அணிசேருங்கள், செயற்படுங்கள்” என்ற கையேடுகளும் பொதுமக்கள் உட்பட அதிகாரிகளுக்கும் விநியோகிக்கப்பட்டன.

உள்ளுராட்சித் தேர்தல் முன்னெடுப்புக்களில் பொதுமக்களின் முழுமையான விழிப்புணர்வும் பங்குபற்றலும் மிக அவசியம் என்பதால் இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளதாக அப்துல் வாஜித் மேலும் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட மார்ச் 12 இயக்க விழிப்புணர்வுக் கையேடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ கட்சிக்காரராக அல்லாமல் நாட்டுப் பிரஜை என்ற ரீதியில் சிந்தியுங்கள், தனியாகவும் கூட்டாகவும் அணிசேருங்கள், நமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக செயற்படுங்கள்” என்றும் பிரதேச நகர மாநகர சபைக்கு கட்சி மற்றும் நிறத்தைப்’ பற்றிக் கருத்திற் கொள்ளாது பொருத்தமானவர்களை மாத்திரமே தெரிவு செய்வோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கட்சி பேதமின்றி உங்கள் பிரதேசத்திற்குத் தகுதியானவர்களை மட்டும் நியமித்துக் கொள்ள செயற்படுங்கள், பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளதை சாதகமாக்கிக் கொள்ள திறமையான மற்றும் ஆர்வமுள்ள பெண்களைப் பட்டியலில் உள்ளடக்குமாறு தலைமைத்துவத்தை வலியுறுத்துங்கள், கட்சி பேதமின்றி பிரதேசத்தின் நலன் கருதி செயற்படக் கூடியவருக்கு ஆதரவை வழங்குங்கள், ஊழல் பேர்வழிகளை எதிர்த்து நில்லுங்கள், தகுதியான வேட்பாளரைத் தெரிவு செய்யுமாறு கட்சியை வலியுறுத்துங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விழிப்புபணர்வுப் பிரச்சாரம் ஏறாவூர் நகரில் முதன் முதலாக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸிடம் கையளிக்கப்பட்டதோடு பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் விநியோகிக்கப்பட்டன.

தேர்தல் விழிப்புணர்வு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]