புதிய இராணுவ பேச்சாளர் பதவியேற்பு

புதிய இராணுவ பேச்சாளர் பதவியேற்பு

புதிய இராணுவ பேச்சாளர்
photo credits www.army.lk

இராணுவத்தின் புதிய பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அதபத்து பதவியேற்றுள்ளார்.

கொழும்பு 4 இல் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் தனது கடமைகளை நேற்று அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிரிகேடியர் சுமித் அதபத்து 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி இலங்கை இராணுவ நித்திய படையணியில் இணைந்து 32 வருடங்களை பூர்த்தி செய்துள்ளார்.

அவர், இராணுவ சிங்க படையணி மற்றும் பொறிமுறை காலாட் படையணியில் பதவிநிலை கடமைகளையும் வகித்துள்ளார்.

மேலும், ஊடக பேச்சாளராக கடமை வகித்த மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன அவர்கள் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]