புதிய அரசுக்கான எதிர்க்கட்சி தலைவராக தொடர்ந்தும் சம்பந்தன்?? டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு

மஹிந்த தலைமையில் நேற்று மாலை புதிய அமைச்சரவை பதவி ஏற்றுக்கொண்டது.

எனினும் இந்த புதிய அரசுக்கும் புதிய பிரதமரான மகிந்த ராஜபக்சவுக்கும் பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் இருக்கின்றதா என்னும் கேள்வி எழுந்துள்ளது

இந்நிலையில் புதிய அரசுக்கான எதிர்க்கட்சி தலைவராக தொடர்ந்தும் சம்பந்தனை வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.

கொழும்பில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் டலஸ் அழகப்பெரும இந்த தகவலை கூறியுள்ளார்.

மேலும் இன்று காலை கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் புதிய பிரதமர் மகிந்தவை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]