புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கு ஜனாதிபதி தலைமைத்துவம் கொடுக்கவில்லை- எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு

புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கு ஜனாதிபதி அவர்கள் அரசியல் தலைமைத்துவம் கொடுக்கவில்லை இது பாரிய குறைபாடாக அமையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊர்காவற்துறையில் இன்று (01) இடம்பெற்ற ஜனாதிபதி உத்தியோகபூர்வ பணி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவிற்கான உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை நிகழ்வு மற்றும் நடமாடும்சேவை என்பன ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது

உள்நாட்லுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் அலவத்துவல ஆகியோர் இதில் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்

இந்த செயற்திட்டத்தின்போது யாழ் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தேவையுடையவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது

அத்துடன் துரிதகியில் அடையாள அட்டை பிறப்பு இறப்பு மற்றும் திருமண சான்றிதல் என்பவற்றை பெற்றுக்கொள்ள பதிவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளுக்கு அரச செலவில் திருமண பதிவுகளும் செய்யப்பட்டது

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் மஞ்சுளாதேவி யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

ஊர்காவற்துறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது முன்னைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட கொலை தாக்குதல்கள் தொடர்பிலும் எம்.ஏ.சுமந்திரன் பேசிய அதேவேளை பாராளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரனும் இங்கு உரையாற்றினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]