புதிய அரசியலமைப்பை முறியடிக்க தமிழ் தரப்பிலே சில போலித் தேசியவாதிகள் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள்

புதிய அரசியலமைப்பை முறியடிக்க தமிழ் தரப்பிலே சில போலித் தேசியவாதிகள் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள்

புதிய அரசியலமைப்பை

மூன்று மொழிகளிலும் அரசியலமைப்பில் இடைகால அறிக்கை ஒற்றை ஆட்சி பொருத்தமற்றது ஒரிடத்தில ஆட்சி அதிகாரம் இருக்க கூடாது அது பகிரப்பட்ட மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என கூறியுள்ள போது ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டார்கள் என தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் சிங்களம் அல்லது சிங்களத்தில் படித்து விளங்காதவர்கள் பெரும் பிரச்சாரம் செய்கிறார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாகிவிடக் கூடாது என்பதிலே சிங்கள தீவிரவாதிகள் மிகவும் மும்மூரமாக இருக்கிறார்கள் ஆனால் தங்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளும் சில் போலித் தேசியவாதிகள் இதனை முறுகியடிப்பதற்கு கங்களம் கட்டிக்கொண்டு தமிழ் தரப்பிவேலே இருந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாக தொழிவுட்டல் கருத்தரங்கு சனிக்கிழமை (25) மாலை மட்டக்களப்பு பேடினன்ட் மண்டபத்திலர் நடைபெற்றது இங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையற்றுகையில் – அரசியிலமைப்பின் இடைக்கால அறிக்கை வெளிவந்த உடனேயே இதனை நிராகரித்துவிட வேண்டும் இதிலே தமிழருக்கு எதுவும் இல்லை கிடையாது என்ற கருத்துக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படத்துகின்றவர்கள் மத்தியிகூட வெளிவந்தது.

அரசயிலமைப்பின் இடைக்கால அறிக்கை வெளிவருவதற்கு முன்பே சம்பந்தன் ஐயாவும் நானும் வழிநடத்தல் குழுவிலிருந்து வெளியேறி விடவேண்டும் என்று கூட தமிழ் தேசிய கூட்டமைப்கில் இருந்தவர்களிடமிருந்து கருத்துக்கள் வந்தன்.

புதிய அரசியல் யாப்பு பேரவை உபகுழு அறிக்கை சென்ற வருடம் வந்தபோது 70 வருட காலத்தில் கிடைக்காததை விஷேடமாக ஆயுத போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் பெறமுடியாதவற்றை தற்போது பெற்றுவிடுவார்களா? இது நடக்குமா நடக்காத என்ற ஆதங்கம் நியாயமாக இருந்தது. இதை பலர் தூண்டிக் கொண்டிருந்தார்கள்.

உபகுழு அறிக்கை வ்தபோது அதில் இருந்த முன்னேற்றங்களை எவரும் எதிர்பார்த்திருக்க வில்லை இது வருமா? வராதா? என்பதை விடுத்து இந்தளவு தூரம் முன்னேற்றமடைந்துள்ளது என்பதை எதிர்பார்த்திருக்காத காரணத்தினாலே அது குறித்து விமர்சனமும் செய்யவில்லை. அவர்கள் எதிர்பார்த்ததை விட முன்னேற்றகரமாக அமைந்திருந்தது.

இடைக்கால அறிக்கை சற்று தமதமாக வந்தபோதிலும் அந்த அறிக்கை எவ்வாறு இருந்தாலம் அதற்குப் போர்க்கொடி தூக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு எங்களில் சிலர் அப்போதே வந்துவிட்டார்கள். அதன் பிரதிபலிபாக அறிக்கை வந்தவுடன் வடக்கு முதலமைச்சர் இதை நிராகரிக்க வேண்டும் என அறிக்கைவிட்டார்.

இடைக்கால அறிக்கையை நிராகரித்துவிட வேண்டும் மக்களை குழப்பிவிட வேண்டும் இதன் மூலமாக இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கிறது இதிலே தமிழ் மக்களும் ஒன்றுமில்லை என கோசிடுவது இது ஏற்கனவே தயார்ப்படுத்திய விடயம்.

ஆட்சி அதிகாரங்கள் மத்திலே இருக்க முடியாது ஒன்றை ஆட்சியாக இருக்க முடியாது அவ்வாறு இருக்கின்ற போது கூடுதலான வாக்குகளினாலேயே குறைந்த எண்ணிக்கையான மக்களுக்கு எதிராக தீர்மானங்கள் எடுக்கப்படும் இந்த அரச சமஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.

மாகாணங்களுக்கு அரச அதிகாரங்கள் பகிர்ந்து கொடுக்கப்படுமாகவிருந்தால் அந்த விடயம் தொடர்பான முழு அதிகாரமும் அந்த பிராந்தியத்துக்கு கொடுக்கப்பட வேண்டும். கொடுக்கப்படுகின்ற அதிகாரங்களை அந்த பிராந்தியங்களின் அனுமதியின்றி மத்திய அரசு மீளப் பெற முடியாததாக இருக்க வேண்டும். இந்த இரண்டும் இருக்குமாக இருந்தால் தர்தமுள்ள அதிகார பகிர்வு முறை. 13வது திருத்தத்திலே இருந்த குறைபாடு இருந்ததனால்தான் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள வில்லை.

இலங்கை ஒரு ஒருமித்த நாடு என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு ஒன்றாக இருக்கின்ற நாடு என்பதை வர்ணிக்கும் சொல்லாக இருக்க வேண்டும். ஆட்சி முறை ஒரிடத்தில் இருக்கும் அதிகாரமாக இருக்க முடியாது மத்தியிலும் மாகாணத்திலும் இருக்க வேண்டும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]