புதிய அரசமைப்பை சு.க. எதிர்க்கவில்லை

புதிய அரசமைப்பை சு.க. எதிர்க்கவில்லை. அரசமைப்புத் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் அறிக்கை அடுத்த மாத இறுதிக்குள் அசரமைப்புப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தெரிவித்துள்ளது.

புதிய அரசமைப்பை

புதிய அரசமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் அரசமைப்பு வழிநடத்தல் குழு ஆராயந்து தீர்மானம் எடுத்து வருகிறது. இந்நிலையில், புதிய அரசமைப்புத் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் தமது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் அறிக்கையை வழிநடத்தல் குழுவில் சமர்ப்பித்து இறுதித் தீர்மானம் எடுத்து அதனை அறிக்கையாக தயாரித்து நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவ்வாறான அறிக்கையை சமர்ப்பிக்காது கால தாமதத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த விடயம் தொடர்பில் நேற்று சு.கவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, எதிர்வரும் மாதத்தின் இறுதிக்குள் நாங்கள் அரசமைப்புத் தொடர்பிலான சு.கவின் நிலைப்பாட்டு அறிக்கையை சமர்ப்பிப்போம் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஐக்கிய ÷சியக் கட்சியும் இன்னனும் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]