புதிய அரசமைப்புக்கு அஸ்கிரியபீடம் எதிர்ப்பை வெளியிட முடிவு

புதிய அரசமைப்புக்கு அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர்கள் எதிர்ப்பை வெளியிடத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழு தனது இடைக்கால அறிக்கையை எதிர்வரும் 6ஆம் திகதி பெரும்பாலும் இறுதி செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட சிறி ஞானரதன தேரர் தலைமையில் நடந்த சங்க சபா கூட்டத்தில் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமையும் ஒற்றையாட்சித் தன்மையும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும், அதிபரின் நிறைவேற்று அதிகாரங்கள் ஒழிக்கப்படக் கூடாது என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால், அரசியலமைப்புத் திருத்தம் மூலம், தேர்தல் மறுசீரமைப்பை அறிமுகப்படுத்த முடியும் என்றும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான இரு கட்சிகளிடையேயும் காணப்பட்ட இழுபறி நிலைகள் தீர்க்கப்பட்டு பொது இணக்கத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள சூழலிலே அஸ்கிரிய பீடத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]