புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை இரண்டு வாரத்தில் அமைச்சரவைக்கு வருகிறது ; ஜனாதிபதி உறுதி

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை இன்னும் இரண்டு வாரத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஊடகப் பிரதானிகள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுடன் இன்று காலை நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

அரசியலமைப்பை பொறுத்தவரை அரசியல் யாப்புச்சபை அடுத்த மாதம் கூடவுள்ளது. அரசியல் யாப்பு வழிகாட்டுதல் குழுவின் இடைக்கால அறிக்கை இன்னும் இரண்டு வாரத்திற்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்.

அடுத்த இரண்டுவார காலப்பகுதியில் நாட்டில் உள்ள முக்கிய அரச நிறுவனங்கள், திணைக்களங்களின் தலைமைப் பதவிகளில் முக்கிய மாற்றங்கள் சில மேற்கொள்ளப்படவுள்ளன. வினைத்திறன் உள்ள வகையில் கடமைகளை முன்னெடுத்துச் செல்லுவதற்காகவே இந்த மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.

நாட்டிற்கு சேதம் ஏற்படும் வகையில் நாட்டின் வளங்களை விற்கப்போவதில்லை. இலங்கைக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் கிடைப்பதில்லை. இந்தியா, சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிடம், நாட்டின் வளங்களை விற்றுவிட்டதாக பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர்.

புதிய அரசமைப்புக்கான
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நாட்டிற்கு சேதம் ஏற்படும் வகையில் நாம் வளங்களை விற்கப்போவதில்லை. இந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துபவர்களை நாட்டிற்கு இழைக்கும் மிகப்பெரிய தேசத்துரோகம். கடந்த மஹிந்த அரசாங்கத்திலேயே இவ்வாறு துரோகம் இழைக்கப்பட்டது. அது துறைமுகநகரத் திட்ட உடன்படிக்கையாகும்.

சீனாவிற்கே முழுக் காணி உரிமையும் எழுதிக்கொடுக்கப்பட்டவாறு 200 ஹெக்டெயர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தின் மேலாக ஹெலிகொப்டரில் பறப்பதற்குகூட சீன அரசாங்கத்தின் அனுமதி பெறக்கூடிய நிர்ப்பந்தம் எற்பட்டிருக்கும். ஆனால் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சீனாவுடனான சுமூகமான உறவுகளைப் பயன்படுத்தி அந்த நிலப்பகுதியை குத்தகைக்குரிய நிலப்பகுதியாக மாற்றியமைத்தது என்றும் ஜனாதிபதி கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]