புதிய அரசமைப்புகான இடைக்கால அறிக்கை மிக சீக்கிரமாக தயாராகி வருகின்றது

புதிய அரசமைப்புகான இடைக்கால அறிக்கை மிக சீக்கிரமாக தயாராகி வருகின்றது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஜனன தினத்தை முன்னெட்டு நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

புதிய அரசமைப்புகான இடைக்கால அறிக்கை அடுத்து வரும் இரண்டு மூன்று மாதங்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். தற்போதைய சூழலில் பலதரப்பட்ட பேச்சுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

இன்னும் மதத் தலைவர்களுடனும், பொது மக்களிடம் கலந்துரையாட வேண்டியுள்ளது. எவ்வாறெனினும் அனைத்து தரப்பினருடைய பொது இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அரசமைப்பு கொண்டுவரப்படும்.

நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தாது ஒற்றையாட்சியை பாதுகாக்கும் வகையில் அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும். ஒற்றையாட்சியின் அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கல் இடம்பெற்று நாட்டை எவ்வாறு முன்நோக்கிக் கொண்டு செல்வது என்று மாகாண முதலமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

புதிய அரசமைப்பினூடாக ஜனநாயகம், மனிதவுரிமைகளை பாதுகாப்பதுடன், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]