புதிய அமைச்சர்கள் விவரம்

புதிய அமைச்சர்கள்

உள்ளுராட்சி தேர்தலுக்கு பின்னர் கொழும்பு அரசியலில் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து, தற்போது அமைச்சரவை மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானித்திருந்த நிலையில், இன்று முற்பகல் அமைச்சர்கள் சிலர், ஜனாதிபதி செயலகத்துக்கு வந்திருந்தனர்.

அதனையடுத்து, மாற்றங்களுடன் கூடிய அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அறிவிக்கப்பட்டது.

இதன்போது, சாகல ரத்னாயக்க வகித்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பதவிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராக லக்‌ஷசமன் கிரியெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னால் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க – இளைஞர் விவகார அமைச்சராக நியமன் பெற்றுள்ளாார்.

ஹரின் பெர்ணான்டோ உட்கட்டமைப்பு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வனவிலங்கு மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சராக ரவீந்திர சமாரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்கள் விவரம்

இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதியமைச்சர்கள் விவரம்

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு பிரதியமைச்சராக அஜித் பி. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சு பொறுப்பு ஜே.சீ. அலவத்துவலவிடம் வழங்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]