புதிய அமைச்சர்கள் நால்வர் பதவியேற்பு

நான்கு புதிய அமைச்சர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று மாலை தற்காலிகமாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.

திறன்கள் அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சராக சரத் அமுனுகம பதவியேற்றுக்கொண்டுள்ளார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிடிய பவியேற்றுள்ளார்.

அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சராக பைசர் முஸ்தபாவும் சமூக வலுவூட்டல், நலன்புரி, கண்டி மரபுரிமைகள் மற்றும் தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சராக மலிக் சமரவிக்ரமவும் பதவியேற்றுக்கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]