புதிய அமைச்சரவையை நியமிக்கும் விடயத்தில் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சில கருத்து மோதல்கள்

முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளைமறுதினம் புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக ஐ.தே.கவின் உள்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் புதிய அமைச்சரவையின் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டப்பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், நாளை புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளது. அதன் பிரகாரமே நாளைமறுதினம் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

புதிய அமைச்சரவையை நியமிக்கும் விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சில கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

குறிப்பாக சட்டம் ஒழுங்கு அமைச்சை அரச தலைவர் தமக்கு கீழ் வைத்துக்கொள்ளவுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவசியமில்லை எனவும் அவர் கூறியுள்ளார். என்றாலும் ஐ.தே.க. இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]